பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையம் வரை பஸ்கள் இயக்க அரசுக்கு வேண்டுகோள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக, வடசித்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பஸ்கள் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, வடசித்துார் பள்ளிவாசல் பகுதியில், கோவை, பனப்பட்டி மற்றும் மெட்டுவாவி ரோடு சந்திக்கும் இடத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார

கிணத்துக்கடவு:கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக, வடசித்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பஸ்கள் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, வடசித்துார் பள்ளிவாசல் பகுதியில், கோவை, பனப்பட்டி மற்றும் மெட்டுவாவி ரோடு சந்திக்கும் இடத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரண்டு டாக்டர்கள், நான்கு செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். சுகாதார நிலையத்துக்கு, சுற்றுப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் தொடர் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.சிகிச்சைக்காக, கிராமங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஊரின் தென்பகுதியில் உள்ள கிணத்துக்கடவு - நெகமம் மற்றும் காட்டம்பட்டி ரோடு சந்திப்பில் இறங்கி, அரை கி.மீ., துாரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் பயணித்தோ ஆரம்ப சுகாதார நிலையம் சென்றடைகின்றனர்.இந்நிலையில், எஸ் 2, 4பி, 46 ஆகிய மூன்று டவுன் பஸ்களை, ஆரம்ப சுகாதார நிலையம் வரை சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இப்பகுதியில் உள்ள காலி இடத்தை பேருந்து நிலையமாக அறிவித்து, வடசித்துார் வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும், இப்பகுதிக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாளருக்கு, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X