பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ நிலையத்தில் இருந்து சீருந்து, மினி பஸ் இயக்க கோரிக்கை

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, பம்மல், அனகாபுத்துார், பெருங்களத்துார் வரை, சீருந்து, மினி பஸ்கள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையம் வழியாக, தினமும், 5,000க்கு மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.கொரோனா

சென்னை : சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, பம்மல், அனகாபுத்துார், பெருங்களத்துார் வரை, சீருந்து, மினி பஸ்கள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையம் வழியாக, தினமும், 5,000க்கு மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.கொரோனா ஊரடங்குக்கு முன், மெட்ரோ பயணியருக்காக, விமான நிலையத்தில் இருந்து, பம்மல், அனகாபுத்துார் மற்றும் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலமான, 'மெப்ஸ்' வரை சீருந்து மற்றும் மினி வேன்கள் மெட்ரோ நிறுவனத்தால் இயக்கப்பட்டன.இதற்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பட்டது.இந்த வசதி, விரைவான பயணத்துக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின், சீருந்துகள், வேன்கள் இயக்கப்படவில்லை.இது குறித்து, அனகாபுத்துார், மெப்ஸ் ஏரியா பயணியர், மெட்ரோ நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை:விமான நிலைய மெட்ரோ நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட, சீருந்து மற்றும் வேன் வசதி நிறுத்தப்பட்டதால், பயணியர் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.நிலையத்திற்கு ஆட்டோக்கள் வந்து செல்வதற்கும் அனுமதி இல்லை. கால் டாக்சிக்கு, கூடுதல் செலவு செய்ய வேண்டிஉள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு செல்வதற்கும், சாலையை குறுக்காக கடந்து, பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்கும், உடைமைகளுடன் இரவு நேரங்களில், திரிசூலம் ரயில் நிலையம் செல்வதற்கும் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மீண்டும் சீருந்து மற்றும் வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னையில், மெட்ரோ நிலையங்களில் இருந்து, முக்கிய இடங்களுக்கு, 'மினி பஸ்' இயக்கப்படும் என, சட்டசபையில், போக்குவரத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மெட்ரோ நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து, பெருங்களத்துார் மற்றும் பம்மல், அனகாபுத்துார் வரையும், சீருந்து, வேன், மினி பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X