சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அயனாவரத்தில் போக்குவரத்து இடையூறு

Added : செப் 29, 2021
Share
Advertisement
அயனாவரம் : கொன்னுார் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலை உள்ளது. நியூ ஆவடி சாலை முதல் புளியந்தோப்பு, ஓட்டேரி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவர்.இச்சாலை முழுதும் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், கடும் போக்குவரத்து இடையூறு
 சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அயனாவரத்தில் போக்குவரத்து இடையூறு

அயனாவரம் : கொன்னுார் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலை உள்ளது. நியூ ஆவடி சாலை முதல் புளியந்தோப்பு, ஓட்டேரி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவர்.இச்சாலை முழுதும் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பெயரில் மட்டும் தான், அயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலை. மற்றபடி மிகவும் குறுகிய சாலை இது.குறிப்பாக, 96 வார்டுக்கு உட்பட்ட சோமசுந்தரம் இரண்டாவது தெரு, சினிவாச பெருமாள் கோவில் அருகில் உள்ள சாலையில், ஏராளமான இருசக்கர வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், காலை முதல் இரவு வரை, இவ்வழியாக செல்லும் அரசு பஸ் உட்பட அனைத்து வாகனங்களும் கடும் சிரமப்படுகின்றன.அதேபோல், இப்பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு வருவோர், வாகனங்களை தாறுமாறாக இயக்கி அட்டூழியம் செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X