கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

Added : செப் 29, 2021
Share
மதுரவாயல் : காவலரின் வாகனத்தில் இடித்து, நிற்காமல் சென்ற காரில், கஞ்சா கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.போரூர், சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தில் இடித்து விட்டு, நிற்காமல் சென்ற காரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.அப்போது, காரில் வந்த இருவர் தப்பினர். காரை சோதனை செய்த போது, 185 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மதுரவாயல் போலீசார்

மதுரவாயல் : காவலரின் வாகனத்தில் இடித்து, நிற்காமல் சென்ற காரில், கஞ்சா கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

போரூர், சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தில் இடித்து விட்டு, நிற்காமல் சென்ற காரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.அப்போது, காரில் வந்த இருவர் தப்பினர். காரை சோதனை செய்த போது, 185 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், 25 மற்றும் புதுராஜா, 25 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X