பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய் உச்சம்: பெட்ரோல், டீசல் மேலும் விலை உயர வாய்ப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் நேற்று உயர்த்தப்பட்டன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. டில்லியில் நேற்று 1 லிட்டர்
Petrol, diesel, Fuel, பெட்ரோல், டீசல்

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் நேற்று உயர்த்தப்பட்டன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. டில்லியில் நேற்று 1 லிட்டர் பெட்ரோல் 101.39 ரூபாய்க்கும், மும்பையில் 107.47 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல், டில்லியில் 89.57 ரூபாய்க்கும், மும்பையில் 97.21 ரூபாய்க்கும் விற்பனையானது.


latest tamil news


உள்ளூர் வரி மற்றும் போக்குவரத்து செலவுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம், நகரத்துக்கு நகரம் பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடு இருக்கும். சமீபத்தில் உருவான புயல்களால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் எரிபொருள் தேவை அதிகரித்து உள்ளது.

பல நாடுகள் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கத் துவங்கி விட்டன. இதையடுத்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 80 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - Chennai,இந்தியா
29-செப்-202113:44:43 IST Report Abuse
vijay சும்மாவே விலையை ஏற்றுவோம் . இப்போ கட்ச விலை வேற ஏறுது . நல்ல காரணம் வேற கெடச்சுருக்கு. ஏத்திவிடுவோம் . எலேச்ஷன் எல்லாம் வருது செலவு செய்ய காசு வேணும். எலேச்ஷன் தேதி அறிவித்தால் விலை ஏற்ற முடியாது .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-செப்-202113:31:49 IST Report Abuse
அசோக்ராஜ் வாகனக் கடனுக்கு துணையான உப கடனாக பெட்ரோல் கடன் திட்டம் என்று வங்கிகள் 🏦 சீக்கிரம் கொண்டு வந்தால் நல்லது. இல்லாவிடில் வாகன விற்பனை பாதித்து டாடா, மஹீந்த்ரா, மூஞ்சால், வேணு ஸ்ரீநிவாசன் அனைவருமே வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தள்ளப்படுவார்கள். மோடி யோசிக்கணும்.
Rate this:
Cancel
29-செப்-202113:14:09 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கட்சா என்னை விலை குறைந்திருக்கும் போதே இவர்கள் ரொம்ப உத்தமர்கள் இப்போ விலை ஏற்றம் அவ்வளவு தான் மோடி COPORATE நஷ்டம் அடைய கூடாது ஒரு 10 மடங்கு ஏற்றி சரி செய்து விடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X