கச்சா எண்ணெய் உச்சம்: பெட்ரோல், டீசல் மேலும் விலை உயர வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய் உச்சம்: பெட்ரோல், டீசல் மேலும் விலை உயர வாய்ப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (11)
Share
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் நேற்று உயர்த்தப்பட்டன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. டில்லியில் நேற்று 1 லிட்டர்
Petrol, diesel, Fuel, பெட்ரோல், டீசல்

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் நேற்று உயர்த்தப்பட்டன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. டில்லியில் நேற்று 1 லிட்டர் பெட்ரோல் 101.39 ரூபாய்க்கும், மும்பையில் 107.47 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல், டில்லியில் 89.57 ரூபாய்க்கும், மும்பையில் 97.21 ரூபாய்க்கும் விற்பனையானது.


latest tamil news


உள்ளூர் வரி மற்றும் போக்குவரத்து செலவுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம், நகரத்துக்கு நகரம் பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடு இருக்கும். சமீபத்தில் உருவான புயல்களால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் எரிபொருள் தேவை அதிகரித்து உள்ளது.

பல நாடுகள் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கத் துவங்கி விட்டன. இதையடுத்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 80 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X