பொது செய்தி

தமிழ்நாடு

வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு எப்போது? காட்சி பொருளான வனசெயல் விளக்க மையம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஆனைமலை;பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, அருவியுடன் கூடிய வன செயல் விளக்க மையத்தை விரைவில் துவங்க வேண்டுமென, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. இங்கு, பூங்கா, அணைப்பகுதி, வண்ண மீன் அருங்காட்சியகம், கவியருவி உள்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.தினமும்
 வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு எப்போது? காட்சி பொருளான வனசெயல் விளக்க மையம்

ஆனைமலை;பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, அருவியுடன் கூடிய வன செயல் விளக்க மையத்தை விரைவில் துவங்க வேண்டுமென, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. இங்கு, பூங்கா, அணைப்பகுதி, வண்ண மீன் அருங்காட்சியகம், கவியருவி உள்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆழியாறு வருவோர், ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள், பழங்குடியினர், விலங்குகள் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்வதற்காக, 2003ல் ஆழியாறு சோதனைச்சாவடி அருகே வனத்துறையினர், வன செயல் விளக்க மையம் அமைத்தனர்.இதில், புலிகள் காப்பகத்தின் பல்லுயிர்கள், வரைபடம், பழங்குடியினரின் வாழ்க்கை முறை, புகைப்படம் மற்றும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வன செயல் விளக்க மையத்தை வனத்துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டதால், இரண்டாண்டுகள் செயல்பட்ட பின் மூடப்பட்டது.இந்நிலையில், 2019 ஜன., மாதம் வனத் துறையினர், மீண்டும் வன செயல் விளக்க மையத்தை சீரமைத்து, புதுப்பிக்கும் பணிகளை துவங்கினர். சோதனைச்சாவடியில் இருந்து நடைபாதை அமைத்து, கம்பிகள் மற்றும் ஆங்காங்கே அமரும் இருக்கைகளும் அமைத்தனர்.வண்ணத்துப்பூசி, அந்துப்பூச்சி, பாம்புகள், முதலைகள், மூங்கில், மீன்கள் என பலவற்றின் தகவல்கள் அடங்கிய பலகைகள் வைத்தனர். ஹார்ன்பில், 'தமிழ் மறவன்' வண்ணத்துப்பூச்சி, பாம்பு, சிலந்தி உள்ளிட்ட சிற்பங்கள் வைத்துள்ளனர்.இங்கு, பூங்கா அமைத்து, வண்ணத்துப்பூச்சிகளை கவரும் வகையில் பல வகை பூ தாவரங்கள் நடவு செய்துள்ளனர். மேலும், கவியருவியைப்போல ஒரு சிறிய அருவியும் இங்குள்ளது. இதிலும், பாதுகாப்பு கம்பித்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வன செயல் விளக்க மையம் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. ஆழியாறு பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த, வனத்துறையினர் விரைவில் இந்த மையத்தை, மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X