பொது செய்தி

தமிழ்நாடு

வண்டலுார் பூங்காவிற்கு 'ஆம்புலன்ஸ்' நன்கொடை

Added : செப் 29, 2021
Share
Advertisement
தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, தனியார் கார் நிறுவனம் சார்பில், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆம்புலன்ஸ்' வழங்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா காரணமாக, 2020 ஏப்ரல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, வண்டலுார் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பூங்காவில் உள்ள விலங்குகளின் குறைந்தபட்ச பராமரிப்பு
 வண்டலுார் பூங்காவிற்கு  'ஆம்புலன்ஸ்' நன்கொடை

தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, தனியார் கார் நிறுவனம் சார்பில், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆம்புலன்ஸ்' வழங்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா காரணமாக, 2020 ஏப்ரல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, வண்டலுார் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பூங்காவில் உள்ள விலங்குகளின் குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதற்கு, செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் இயங்கி வரும், 'ரெனால்ட் நிசான்' தொழில்நுட்பம் மற்றும் வணிக மைய நிறுவனம், உதவிக்கரம் நீட்டியது.அந்நிறுவனத்தின், சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, இதுவரை பூங்காவில் உள்ள, விலங்குகள் தகவல் பலகைகளை புதுப்பிக்கவும், விலங்குகள் இருப்பிடங்களில் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் விளக்குகள், 14 நபர்கள் அமரும் விதமாக, இரண்டு மின்கல ஊர்திகள் என, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான, உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.நேற்று, இதே நிறுவனம், பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் விதமாக, 'ஆம்புலன்ஸ்' ஒன்றும் வழங்கி உள்ளது.

கடந்த ஓராண்டில், 'ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ்' நிறுவனம், சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து, 1.60 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. தவிர, பூங்காவில் உள்ள, 'விலங்குகள் தத்தெடுப்பு' திட்டம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த, 'டி.சி.கே.ஏ.பி., ஈகாமர்ஸ்' என்ற நிறுவனம், உலக காண்டாமிருக தினத்தில், ஒரு ஜோடி காண்டாமிருகங்களை, ஆறு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், 'விஷ்ணு' என்ற சிங்கத்தையும், 'பிரக்ருதி' என்ற யானையையும் ஆறு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். இதேபோல், விலங்குகளை தத்தெடுக்கவும், நிதி வழங்கவும் விரும்புவோர், support@aazp.inஎன்ற மின்னஞ்சல் மற்றும் 044 -2954 2301 என்ற, தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X