சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போன் பறிக்க முயற்சி பள்ளி மாணவர்கள் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் : மொபைல் போன் பறிக்க முயன்ற பிளஸ் 2 மாணவர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 32. இவர், நேற்று முன்தினம் இரவு வேலன் நகரில், மொபைல் போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரது மொபைல் போனை பறிக்க முயன்றனர். இதில் ஒருவனை, சந்தோஷ்குமார் மடக்கி பிடிக்க,

வளசரவாக்கம் : மொபைல் போன் பறிக்க முயன்ற பிளஸ் 2 மாணவர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 32. இவர், நேற்று முன்தினம் இரவு வேலன் நகரில், மொபைல் போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரது மொபைல் போனை பறிக்க முயன்றனர்.

இதில் ஒருவனை, சந்தோஷ்குமார் மடக்கி பிடிக்க, மற்றவர்கள் தப்பினர். பிடிபட்டவர் வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.விசாரணையில், மதுரவாயலில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவன் என, தெரிய வந்தது. பிடிபட்ட மாணவன் அளித்த தகவலின்படி, மற்றொரு மாணவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர் குறித்தும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X