ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

Added : செப் 29, 2021
Share
அண்ணா நகர் : இருசக்கர வாகனத்தின் மீது, ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.சூளைமேடு, திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சர்மா, 25; தனியார் நிறுவன மேலாளர்.இவர் கடந்த 22ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், அமைந்தகரையில் இருந்து, அண்ணா நகர் நோக்கி சென்றார்.அண்ணா நகர் 'ஆர்ச்' அருகில் சென்றபோது, வேலுாரில் இருந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த,

அண்ணா நகர் : இருசக்கர வாகனத்தின் மீது, ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.சூளைமேடு, திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சர்மா, 25; தனியார் நிறுவன மேலாளர்.

இவர் கடந்த 22ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், அமைந்தகரையில் இருந்து, அண்ணா நகர் நோக்கி சென்றார்.அண்ணா நகர் 'ஆர்ச்' அருகில் சென்றபோது, வேலுாரில் இருந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த, '108' ஆம்புலன்ஸ், இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் காயமடைந்த கோகுல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோகுல் சர்மா உயிரிழந்தார்.இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த, ஆம்புலன்ஸ் ஓட்டுனர், தினேஷ் குமார், 42, என்பரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X