பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் திட்டங்களில் பயன்பெற முன்னுரிமை பதிவுக்கு அறிவுறுத்தல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை:வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்திட்டங்களில் பயன் பெறுவதற்கு, முன்னுரிமை பெற, விவசாயிகள் பதிவு செய்யுமாறு, உடுமலை வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கை:உடுமலை வட்டாரத்தில், வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் வாயிலாக, உளுந்து, கம்பு,

உடுமலை:வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்திட்டங்களில் பயன் பெறுவதற்கு, முன்னுரிமை பெற, விவசாயிகள் பதிவு செய்யுமாறு, உடுமலை வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கை:உடுமலை வட்டாரத்தில், வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் வாயிலாக, உளுந்து, கம்பு, கொண்டைக்கடலை பயிர்களுக்கு செயல்விளக்க திடல்கள் அமைத்தல், சிறுதானியங்கள், பயறுவகை பயிர்களுக்கு நுண்ணுாட்ட உரங்கள் வழங்குதல், நுண்ணுயிர் உரங்கள் வழங்குதல், உயிரி பூச்சிக்கொல்லி, கைத்தெளிப்பான் ஆகியவை, 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், நெல் விதை மானிய விலையில் தரப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியம் வழியாக, பூச்சி நோய் தாக்கி மகசூல் குறைவான மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, புதிய கன்றுகள் நட மானியம் வழங்கப் படுகிறது.மேலும், பசுந்தாள் உரத்திற்கு, தக்கை பூண்டு விதைகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது. மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்த, உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வரப்பு பயிர் சாகுபடிக்கு உளுந்து, பச்சை பயறு விதைகளும் மானிய விலையில் கொடுக்கப் படுகிறது.விவசாயிகள், மானியத்திட்டங்களின் கீழ் பயன்பெறவும், முன்னுரிமை பெறவும், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் விண்ணப்பித்து, முன்னுரிமை பெறலாம்.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை அபிவிருத்திதிட்டத்தின் கீழ், ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனுார், தும்பலப்பட்டி, மொடக்குப்பட்டி, குறிஞ்சேரி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராம விவசாயிகளுக்கு, வேளாண் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X