ஊருணி கரை அருகே இடம் தகராறு; சாலை மறியல்: போலீசார் குவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊருணி கரை அருகே இடம் தகராறு; சாலை மறியல்: போலீசார் குவிப்பு

Added : செப் 29, 2021
Share
எழுமலை : எம்.கல்லுப்பட்டியில் கோர்ட் உத்தரவுப்படி அளவீடு செய்த பகுதியில் கல் ஊன்றியதை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் நடைபெற்றது.எம். கல்லுப்பட்டி பஸ்ஸ்டாண்ட், ஊருணி பகுதியில் ஒருபிரிவினருக்கு சொந்தமான இடம் உள்ளது. இதனை கோர்ட் உத்தரவுப்படி நேற்று பேரையூர் தாசில்தார், போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்து கொடுத்தனர். அங்கு கல் ஊன்றினர்.

எழுமலை : எம்.கல்லுப்பட்டியில் கோர்ட் உத்தரவுப்படி அளவீடு செய்த பகுதியில் கல் ஊன்றியதை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் நடைபெற்றது.

எம். கல்லுப்பட்டி பஸ்ஸ்டாண்ட், ஊருணி பகுதியில் ஒருபிரிவினருக்கு சொந்தமான இடம் உள்ளது. இதனை கோர்ட் உத்தரவுப்படி நேற்று பேரையூர் தாசில்தார், போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்து கொடுத்தனர். அங்கு கல் ஊன்றினர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் ஊன்றப்பட்ட கற்களை சேதப்படுத்தி, ரகளையில் ஈடுபட்டனர். தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இப்பிரச்னையில் கற்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு 10:00 மணியளவில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., பாஸ்கரன், ஏ.டி.எஸ்.பி., முரளிதரன், டி.எஸ்.பி., நல்லு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர். 11:00 மணிவரை ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X