போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி  தஞ்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி  தஞ்சம்

Added : செப் 29, 2021
Share
விருத்தாசலம் : திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் அருண்குமார், 25; இவர் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் முகில்வாணி, 18, என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார். இருவரும் ஒரே சமூகத்தைச்

விருத்தாசலம் : திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.

விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் அருண்குமார், 25; இவர் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் முகில்வாணி, 18, என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களின் காதலுக்கு முகில்வாணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நேற்று காதலர்கள் இருவரும், மேமாத்துார் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். விருத்தாசலம் போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X