அக்.1 முதல் மதுரை - சென்னை அரசு விரைவு ஏசி பஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்.1 முதல் மதுரை - சென்னை அரசு விரைவு ஏசி பஸ்கள்

Added : செப் 29, 2021
Share
மதுரை : மதுரையில் இருந்து சென்னைக்கு அக்.,1 முதல் ஏசி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவு பஸ்கள் நாள் ஒன்றுக்கு ஏழு முறை இயக்கப்படவுள்ளது.மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக உதவி மேலாளர் (இயக்கம்) சிவராமன் கூறியதாவது: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இப்பஸ் கீழ் பகுதியில் 30 இருக்கைகள் மேலே 15 படுக்கை

மதுரை : மதுரையில் இருந்து சென்னைக்கு அக்.,1 முதல் ஏசி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவு பஸ்கள் நாள் ஒன்றுக்கு ஏழு முறை இயக்கப்படவுள்ளது.

மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக உதவி மேலாளர் (இயக்கம்) சிவராமன் கூறியதாவது: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இப்பஸ் கீழ் பகுதியில் 30 இருக்கைகள் மேலே 15 படுக்கை வசதிகள் இருக்கும். அலைபேசி ரீசார்ஜ் வசதி உள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்படும்.தினமும் காலை 10:00, 11:00, மதியம் 12:00, 1:00 மற்றும் இரவு 8:30, 9:30, 10:30 மணிக்கு மதுரையில்இருந்து இயக்கப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவு விவரங்களுக்கு 94450 17791ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X