பொது செய்தி

இந்தியா

கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; கவர்னர் தமிழிசை

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தி, கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில், வில்லியனுார் டெரகோட்டா, திருக்கனுார் காகிதக் கூழ் பொம்மை படங்கள் இடம்பெற்ற சிறப்பு தபால் உறைகள் வெளியீட்டு விழா, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை, சிறப்பு தபால்
 கலைஞர்களின்  வாழ்வாதாரத்தை  ஊக்குவிக்க வேண்டும்; கவர்னர் தமிழிசை

புதுச்சேரி : 'புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தி, கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில், வில்லியனுார் டெரகோட்டா, திருக்கனுார் காகிதக் கூழ் பொம்மை படங்கள் இடம்பெற்ற சிறப்பு தபால் உறைகள் வெளியீட்டு விழா, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை, சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டார்.சென்னை மண்டல தபால் துறை இயக்குநர் சோமசுந்தரம், சென்னை நகர தபால் துறை தலைமை அதிகாரி வீணா ஸ்ரீனிவாஸ், புதுச்சேரி தலைமை தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், தேசிய விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை, நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்று, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு தபால் உறைகளை வெளியிடுவதற்காக புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தைப் பாராட்டுகிறேன்.கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவு களை கட்டமைத்து உள்ளது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

நமக்கு வேண்டியவர்களிடம் மனம்விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன.வரலாறுகளையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X