பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பளு தூக்குதல்; மதுரை மாணவிகள் சாதனை

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரி மாணவிகள் நேபாளத்தில் நடந்த சர்வதேச பளு துாக்குதல் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.இந்தோ - நேபாள் சர்வதேச பளு துாக்குதல் போட்டிகள் செப்., 14 - 18 வரை நேபாளத்தில் நடந்தது. இதில் 19 வயது 76 கிலோ எடை பிரிவில் இக்கல்லுாரி பொருளியல் மூன்றாமாண்டு மாணவி சிவசத்தியா, 19 வயது 71 கிலோ எடை பிரிவில் மூன்றாமாண்டு வரலாறு மாணவி

மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரி மாணவிகள் நேபாளத்தில் நடந்த சர்வதேச பளு துாக்குதல் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தோ - நேபாள் சர்வதேச பளு துாக்குதல் போட்டிகள் செப்., 14 - 18 வரை நேபாளத்தில் நடந்தது. இதில் 19 வயது 76 கிலோ எடை பிரிவில் இக்கல்லுாரி பொருளியல் மூன்றாமாண்டு மாணவி சிவசத்தியா, 19 வயது 71 கிலோ எடை பிரிவில் மூன்றாமாண்டு வரலாறு மாணவி ஹரிணி பங்கேற்றனர். சிவசத்தியா தங்கம், ஹரிணி வெள்ளி பதக்கம்வென்றனர்.

மதுரை திரும்பிய மாணவிகளுக்கு கல்லுாரியில் முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. துணை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, பயிற்சியாளர் காஞ்சனா, பேராசிரியைகள் வனிதா, மலர்விழி, உடற்கல்வி இயக்குனர்கள் சாந்தமீனா, ஹேமலதா (சுயநிதி பிரிவு), பயிற்சியாளர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X