பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் இருதய பாதிப்பை அதிகமாக்கிவிடும்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை, : ''மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் இருதய பாதிப்பை மோசமாக்குகிறது'' என உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கருத்தரங்கில் இருதயவியல் துறைத் தலைவர் கணேசன் பேசியதாவது: இருதய பிரச்னை வராமல் முன்கூட்டி தடுப்பதே சிறந்த தீர்வு. தாமதமாவதற்கு

மதுரை, : ''மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் இருதய பாதிப்பை மோசமாக்குகிறது'' என உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் இருதயவியல் துறைத் தலைவர் கணேசன் பேசியதாவது: இருதய பிரச்னை வராமல் முன்கூட்டி தடுப்பதே சிறந்த தீர்வு. தாமதமாவதற்கு முன்பே இளம் தலைமுறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருதய ரத்தநாள நோய் வருவதற்கான சிக்கல்களை உரிய சோதனைகளின் மூலம் கண்டறிவது அவசியம்.

உயர் ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசு, உடற்பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடற்பயிற்சியின்மை மற்றும் மது அருந்துதல் ஆகியவை இருதய பிரச்னைக்கான காரணிகள். ஆனால் மனஅழுத்தம், துரித உணவு, போதிய உறக்கமின்மை போன்றவை பெரிய காரணங்களாக மாறியுள்ளன, என்றார்.

முதுநிலை டாக்டர் சிவகுமார் பேசுகையில், ''மாரடைப்பு அறிகுறி தோன்றியதிலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் பாதிப்பின் கடுமைத் தன்மையும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும்” என்றார்.

இருதயவியல் டாக்டர் ஜெயபாண்டியன் பேசுகையில், ''ஆசியாவிலேயே மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தான் நவீன மேம்பட்ட வசதிகளுடன் கருவிகள் உள்ளது'' என்றார்.

இருதய - நுரையீரல் ரத்த நாள அறுவைசிகிச்சை துறைத் தலைவர் கிருஷ்ணன், டாக்டர் ராஜன், இருதயம் சார்ந்த உணர்விழப்பு துறையின் முதுநிலை டாக்டர் குமார், இருதயவியல் முதுநிலை டாக்டர்கள் செல்வமணி, சம்பத்குமார் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X