பொது செய்தி

தமிழ்நாடு

நகரமைப்பு பிரிவில் லஞ்சத்திற்காக கோப்புகளை முடக்கும் அவலம்  

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கோப்புகளை பரிசீலிக்காமல் முடக்கி வைத்துள்ளனர் என தமிழ்நேசன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர்கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தனர்.தலைவர் பெருமாள் கூறியதாவது: லஞ்சத்திற்காக நகரமைப்பு, பொறியாளர் பிரிவுகளில் 4 மாதங்களாக பல கோப்புகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கமிஷனரிடம் புகார் அளிக்க

மதுரை : மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கோப்புகளை பரிசீலிக்காமல் முடக்கி வைத்துள்ளனர் என தமிழ்நேசன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர்கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தனர்.

தலைவர் பெருமாள் கூறியதாவது: லஞ்சத்திற்காக நகரமைப்பு, பொறியாளர் பிரிவுகளில் 4 மாதங்களாக பல கோப்புகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கமிஷனரிடம் புகார் அளிக்க மக்கள் தயங்குகின்றனர்.நகரமைப்பு பிரிவில் ஒப்புதல் பெற்று மாநகராட்சிக்கு வரும் கோப்புகளுக்கு மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் இட ஆய்வு செய்து கட்டணம் செலுத்த கடிதம் அளிப்பர். கட்டணம் செலுத்தப்பட்ட பின் கமிஷனர் ஒப்புதல் அளிப்பார். இம்முறை பல காலமாக இங்கு பின்பற்றப்படுகிறது.

நேர்மையாக செயல்படும் கமிஷனர்கீழே உள்ள அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்காககட்டணம் செலுத்தியும் கோப்புகள் மீது ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைக்கின்றனர். இது குறித்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X