பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் அவசியம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் இணையவழியில் நடந்தது.டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம், வளர்மதி, இந்திராணி மற்றும் 100க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.சி.இ.ஓ., பேசியதாவது:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் கூட மாணவர் சிலர் வாசிக்க தெரியாமல் உள்ளனர். அவர்கள் விவரம் தயாரித்து உரிய முறையில் கற்பிக்க

மதுரை : மதுரையில் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் இணையவழியில் நடந்தது.

டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம், வளர்மதி, இந்திராணி மற்றும் 100க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.சி.இ.ஓ., பேசியதாவது:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் கூட மாணவர் சிலர் வாசிக்க தெரியாமல் உள்ளனர். அவர்கள் விவரம் தயாரித்து உரிய முறையில் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு தினம் 'ஹோம் ஒர்க்' மற்றும் 'கிளாஸ் ஒர்க்' கொடுக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக 6 - 8ம் வகுப்பு மாணவர் கல்வி தொலைக்காட்சியை பார்க்கின்றனரா என கண்காணிக்க வேண்டும். நேரடி வகுப்புகளில் ஆசிரியர்கள் 'சாக் அண்ட் டாக்' கற்பித்தல் முறையை தவிர்த்து சார்ட், வீடியோ, ஆடியோ மற்றும் உபகரணம் மூலம் கற்பிக்கும் முறைக்கு மாற வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஐ.சி.டி., என்ற கணினி பயிற்சி முடிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X