சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை திடீர் நிறுத்தம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே 100 நாள் வேலையை பி.டி.ஓ. திடீரென நிறுத்தியதை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. இந்த ஒன்றிய கவுன்சிலர் பகுதியில் வலசக்காடு, நங்குடி, கோதண்டவிளாகம் ஊராட்சிகள்
 100  நாள் வேலை திடீர் நிறுத்தம்  ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே 100 நாள் வேலையை பி.டி.ஓ. திடீரென நிறுத்தியதை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. இந்த ஒன்றிய கவுன்சிலர் பகுதியில் வலசக்காடு, நங்குடி, கோதண்டவிளாகம் ஊராட்சிகள் உள்ளடங்கியுள்ளது. நேற்று முன்தினம் வலசக்காடு ஊராட்சி குறிஞ்சிக்குடி கிராமத்தில் 100 நாள் வேலை நடந்த பகுதிக்கு வந்த கட்சியினர் சிலர் அங்கு பணியில் இருந்தவர்களுக்கு குளிர்பானம் வாங்கித் கொடுத்து ஓட்டு சேகரித்ததாக புகார் எழுந்தது.

இதனால் நேற்று திட்ட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்ரீமுஷ்ணம் பி.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெகு நேரமாகியும் அதிகாரிகள் வராதாதால் விருத்தாசலம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. பின், பி.டி.ஓ. பாலகிருஷ்ணன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மீண்டும் பணி வழங்குவதாகவும், நேற்று நிறுத்தப்பட்ட நாளின் சம்பளத்தையும் சேர்த்து வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X