பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் நீக்கப்பட்டபெண்கள் பணி வழங்க கோரிக்கை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கடலுார் : பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து நீக்கப்பட்ட பெண்கள், மீண்டும் பணி வழங்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து நீக்கப்பட்ட பெண்கள் கடலுாரில் கலெக்டரை சந்தித்து அளித்த மனு: பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2015 முதல் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் சம்பளம் பெற்று, 12 பேர் கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிகிறோம். கொரோனா
 அம்மா உணவகத்தில் நீக்கப்பட்டபெண்கள் பணி வழங்க கோரிக்கை

கடலுார் : பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து நீக்கப்பட்ட பெண்கள், மீண்டும் பணி வழங்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து நீக்கப்பட்ட பெண்கள் கடலுாரில் கலெக்டரை சந்தித்து அளித்த மனு: பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2015 முதல் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் சம்பளம் பெற்று, 12 பேர் கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிகிறோம். கொரோனா தொற்று, மழை, வெள்ளம், புயல் காலத்திலும் மக்களுக்கு மூன்று வேலை உணவு சமைத்து வழங்கினோம். இங்கு பணிபுரியம் பெண்கள் பலர் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஏழைகள்.இந்நிலையில், திடீரென 6 பேரை வேலைக்கு வரவேண்டாம் என, பண்ருட்டி நகராட்சி அதிககாரிகள் கூறுகின்றனர். எனவே, 12 பேரையும் பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X