கிரைம் செய்திகள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஆபாச பேச்சு : 3 பேர் கைதுகடலுார்: கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் அருகில் பொது இடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய 4 பேரை பிடிக்க முயன்றனர். இதில், ஒருவர் தப்பினார். பிடிபட்ட புதுப்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி, 28; வள்ளல், 32; சதீஷ்குமார், 26; ஆகியோரை கைது செய்து

ஆபாச பேச்சு : 3 பேர் கைது

கடலுார்: கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் அருகில் பொது இடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய 4 பேரை பிடிக்க முயன்றனர். இதில், ஒருவர் தப்பினார். பிடிபட்ட புதுப்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி, 28; வள்ளல், 32; சதீஷ்குமார், 26; ஆகியோரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த சரவணனை தேடி வருகின்றனர்.

மின்நிலைய பூட்டு உடைப்பு

பெண்ணாடம்: பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு நேற்று காலை 9:00 மணியளவில் ஊழியர்கள் வந்தனர். பெண்ணாடம் நகரம் மற்றும் மேற்கு அலுவலகங்களின் பூட்டுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எந்த பொருளும் திருடு போகவில்லை. உதவி பொறியாளர்கள் (மேற்கு) சக்திவேல், (நகரம்) வெங்கடேசன் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இளம்பெண் மாயம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த ஒறையூரை சேர்ந்த மணிக்கண்ணன் மகள் கோகுலபிரியா 19; இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழித்து வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கோகுலபிரியாவை தேடி வருகின்றனர்

சைக்கிள் திருடிய இருவர் கைது

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தைச்சேர்ந்தவர் நாகராஜன்,36. இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, நேற்று முன் தினம் இரவு 2.30 மணிக்கு பைக்கில் வந்த இரண்டு பேர் திருடிச்சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், திருடர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம், ஒகளூரைச்சேர்ந்த ஆனந்தகுமார்,27; ஆனந்தசெல்வன்,30; என தெரிந்தது. புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X