பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 842 நோயாளிகளுக்கு சிகிச்சை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கடலுார் : கொரோனா பாதித்த 842 பேர், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுள்ளதாக, கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2009ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம்
 முதல்வர் காப்பீட்டு திட்டத்தில்  842 நோயாளிகளுக்கு சிகிச்சை

கடலுார் : கொரோனா பாதித்த 842 பேர், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுள்ளதாக, கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2009ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் 3ம் ஆண்டு விழா கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில், அவரது அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் உள்ளிட்ட 25 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, தொடர்ந்து காப்பீடு திட்டத்தால் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு மற்றும் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி, ஜிப்மர் மருத்துவமனை, கடலுார் மற்றும் சிதம்பரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய மருத்துவமனை காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

திட்டம் குறித்து கலெக்டர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 102 பயனாளிகளுக்கு ரூ. 226 கோடியே 95 லட்சத்து 6 ஆயிரத்து 984 சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது. 6 லட்சத்து 16 ஆயிரத்து 61 குடும்பங்களுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 842 பேர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனடைந்துள்ளனர், என்றார். நலப்பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, தேசிய சுகாதாரதிட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், மருத்துவ காப்பீடு மாவட்ட திட்ட அலுவலர் மணிவண்ணன், மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பரணிதரன், ஆரோக்கியதாஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X