தகராறை தட்டிக் கேட்ட டிரைவருக்கு கத்திக்குத்து

Added : செப் 29, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட டிரைவரை பாட்டிலால் குத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான வில்லுபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜ், 32; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம், காசாந்திட்டு அருகே மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, வரதராஜ் ஊரை சேர்ந்த

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட டிரைவரை பாட்டிலால் குத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான வில்லுபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜ், 32; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம், காசாந்திட்டு அருகே மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, வரதராஜ் ஊரை சேர்ந்த ரங்கசாமி யிடம், தானம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம், நல்லவாடு பகுதியை சேர்ந்த குமரகுரு ஆகிய இருவரும் தகராறு செய்தனர்.இதை தட்டிக்கேட்ட வரதராஜை, இருவரும் சேர்ந்து பாட்டிலால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, முருகானந்தம், குமரகுரு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X