கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழிசைக்கு எதிரான அவதூறு வழக்கு; உயர் நீதிமன்றம் ரத்து

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிரான அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். இவர், தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகித்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து பேட்டி அளித்தார்.இதையடுத்து, காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தாடி கார்த்திகேயன் என்பவர், தமிழிசைக்கு எதிராக
Madras HC, Tamilisai, Tamilisai Soundararajan, High Court, தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிரான அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். இவர், தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகித்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து பேட்டி அளித்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தாடி கார்த்திகேயன் என்பவர், தமிழிசைக்கு எதிராக 2017ல் புகார் தாக்கல் செய்தார். கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக, அவதுாறான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக புகாரில் கூறியிருந்தார்.

இதை விசாரணைக்கு ஏற்று, தமிழிசைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தமிழிசை மனு தாக்கல் செய்தார்.


latest tamil news
மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:


நான்கு முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், இரு தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. கட்சி மற்றும் தலைவருக்கு எதிராக அவதுாறு பேசியதாக கூறியிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.புகாரை பார்க்கும் போது, அரசியல் விளம்பரம் தேடும் முயற்சி தெரிகிறது. பேட்டி அளித்ததால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கட்சியோ, அதன் தலைவரோ, புகாரை தாக்கல் செய்யும்படி தாடி கார்த்திகேயனுக்கு அனுமதி அளிக்கவில்லை. சொந்த விருப்பத்தில், புகார் தாக்கல் செய்துள்ளார். அதை, ஏற்க முடியாது.

அவதுாறு குற்றத்துக்காக புகார் கொடுக்கப்பட்டு இருந்தாலும், மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ், நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்கும் போது, நீதிமன்றத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலிக்காதது தெரிகிறது. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
29-செப்-202109:47:04 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதுக்கே, இந்த வழக்கு ரத்து , ஓமலூரில் கொடியேத்த சென்ற சிறுத்தைகள் மீது தடியடி என்று இறங்கி அடிக்கும் திமுக, இனி பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் அநேகமாக சிறுத்தைகள் firing செய்யப்படலாமோ என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
29-செப்-202106:37:46 IST Report Abuse
Balaji இந்தம்மாவப்பப்த்தி அவங்க உருவத்தைப்பத்தியெல்லாம் இந்த தமிழ் மண்ணு டிராவிஷர்கள் செய்யாத அவமதிப்பா? உண்மைய சொன்னா அவமதிப்புன்னு இவிங்க கூவுறது.. ஹி ஹி... போங்கப்பா போயி புள்ள குட்டிங்களையாவது படிக்கவெக்கிற வேலையைப்பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X