பத்திரிகையாளர்கள் குறித்து பைடன் கருத்து; சமாதான முயற்சியில் வெள்ளை மாளிகை

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிகையாளர்களை விட, இந்திய பத்திரிகையாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை அடுத்து, அந்நாட்டு பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். அந்த
Joe Biden, US President, Biden

வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிகையாளர்களை விட, இந்திய பத்திரிகையாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை அடுத்து, அந்நாட்டு பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'அமெரிக்க பத்திரிகையாளர்களை விட, இந்திய பத்திரிகையாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. வேறு நாட்டு பிரதமர் முன்னிலையில் தொடர்பில்லாத கேள்விகளை அமெரிக்க பத்திரிகையாளர்கள் கேட்டனர்' என, அதிபர் பைடன் தெரிவித்தார்.


latest tamil news



இந்த கருத்து அமெரிக்க பத்திரிகையாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு ஊடகத்தினரை அழைத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலர் ஜென் சாக்கிஅமெரிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சரமாரியாக கேள்விகள் முன்வைக்கப் பட்டன.

அதற்கு ஜென் சாக்கி அளித்த பதில்: அமெரிக்க பத்திரிகையாளர்கள் சூழ்நிலைக்கு தக்க கேள்விகளை கேட்கவில்லை என்பதை தான் அதிபர் அவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என நினைக்கிறேன். கொரோனா தடுப்பூசி குறித்து அதிபர் பேச நினைத்துள்ளார். ஒரு சிலர் அது குறித்த கேள்விகளை கேட்டீர்கள். பலர், தொடர்பில்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தனர்.அன்றைய தினத்திற்கு தொடர்பில்லாத கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மற்றபடி அமெரிக்க செய்தியாளர்களை அதிபர் குறைத்து மதிப்பிடவில்லை.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-செப்-202112:25:52 IST Report Abuse
தமிழன் அப்பிடி என்னத்த தான் கேட்டானுக?
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
29-செப்-202111:53:18 IST Report Abuse
Suppan எஸ் ஆர் பாரதி சொன்னால் சரி அதையே H ராஜா சொன்னால் தவறு. இதிலும் ஜாதியைப் பார்த்துத்தான் நடவடிக்கையோ
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
29-செப்-202110:28:58 IST Report Abuse
Suri இங்கு எச் ராஜா சர்மா போன்று அங்கு சில பேர் இருக்கின்றனர்.
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
29-செப்-202112:25:13 IST Report Abuse
தமிழன்உண்மையா தட்டி கேக்குறவங்க இருக்காங்கங்குறீங்க. ரைட்டு....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
29-செப்-202113:02:04 IST Report Abuse
Balajiகிளீனர் இஷ்டயில்.. இஷ்டத்துக்கு சேறு வாரி கொட்ட வேண்டீது.. H ராஜா அப்புடி என்ன சொன்னாரு? கொஞ்சம் வெவரம் சொல்லேன் பாப்போம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X