பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை மதகில் கசிவு: தண்ணீர் வீணாகும் அவலம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில், திருவந்திபுரம் தடுப்பணை மதகுகளில் கசிவு காரணமாக தண்ணீர் வீணாக வெளியாகி வருகிறது.கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. படுகை அணையாக இருந்த நிலையில் மதகுகள் அமைத்து தண்ணீர் சேமிக்க, தரம் உயர்த்தப்பட்டு, தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் தடுப்பணையில், தண்ணீர் தேங்கிய நிலையில்
 தடுப்பணை மதகில் கசிவு: தண்ணீர் வீணாகும் அவலம்

கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில், திருவந்திபுரம் தடுப்பணை மதகுகளில் கசிவு காரணமாக தண்ணீர் வீணாக வெளியாகி வருகிறது.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. படுகை அணையாக இருந்த நிலையில் மதகுகள் அமைத்து தண்ணீர் சேமிக்க, தரம் உயர்த்தப்பட்டு, தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் தடுப்பணையில், தண்ணீர் தேங்கிய நிலையில் தற்போது மதகுகள் சரியில்லாததால், தேங்கிய மழை நீர் கசிந்து வெளியேறி வருகிறது. தங்கள் பகுதியில் மழைநீர் தேக்கத்தால் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்த்த விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கசிவால் வீணாகும் தண்ணீரை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X