பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி குளறுபடி விருத்தாசலத்தில் மக்கள் அச்சம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு தினசரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் முதல் தடுப்பூசி போட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு, நேற்று இரண்டாவது தடுப்பூசி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு தினசரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் முதல் தடுப்பூசி போட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு, நேற்று இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாக, அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், விருத்தாசலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் சிலருக்கு ஆதார் எண் மற்றும் சரியான விபரம் வாங்காமல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனால், விபரங்கள் பதிவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை சரியாக பதிவேட்டில் பதியாததால், தடுப்பூசி எண்ணிக்கை அதிகமாகியது.இதனை சரிகட்ட, ஜூலை மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாக நேற்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ள பொதுமக்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாக, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X