மகாலட்சுமியின் உருவம் பொறித்த 20 கிராம் தங்கம்: பிரிட்டன் நிறுவனம் அசத்தல்| Dinamalar

மகாலட்சுமியின் உருவம் பொறித்த 20 கிராம் தங்கம்: பிரிட்டன் நிறுவனம் அசத்தல்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (13)
Share
லண்டன்: பிரிட்டனின் ராயல் மின்ட் நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், எலிசபெத் அரசிக்கு சொந்தமான ராயல் மின்ட் நிறுவனம், தங்க நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவற்றை தயாரித்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம்
Royal Mint, Gold Bar, Goddess Lakshmi, Diwali

லண்டன்: பிரிட்டனின் ராயல் மின்ட் நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், எலிசபெத் அரசிக்கு சொந்தமான ராயல் மின்ட் நிறுவனம், தங்க நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவற்றை தயாரித்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் முதன் முறையாக தீபாவளியை முன்னிட்டு, ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த, 20 கிராம் தங்கப் பதக்கத்தை தயாரித்துள்ளது. கார்டிப் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, எம்மா நோபல் என்ற வடிவமைப்பாளர் இந்த நாணயத்தை உருவாக்கியுள்ளார்.


latest tamil news


இது குறித்து ராயல் மின்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆன்ட்ரூ டிக்கி கூறியதாவது: ஹிந்துக்களின் தீபாவளி பண்டிகை, திருமணம், பிறந்தநாள் விழா போன்றவற்றில் தங்க நகைகள், பதக்கங்கள், நாணயங்கள் போன்ற நல்ல பரிசுகள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்தாண்டு தீபாவளிக்கான பரிசுக்கு அழகு, பாரம்பரியம் ஆகியவையுடன் நவீன அம்சம் கலந்து தங்கப் பதக்கத்தை உருவாக்க திட்டமிட்டோம்.

அதன்படி செல்வத்திற்கு அதிபதியான ஹிந்து கடவுள் மகாலட்சுமியின் உருவம்பொறித்த தங்கப் பதக்கத்தை, ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியாவின் வழிகாட்டுதலுடன் தயாரித்துள்ளோம். அந்தக் கோவிலில் நவ., 4ம் தேதி தீபாவளியன்று நடக்கும் லஷ்மி பூஜையில் இந்த தங்கப் பதக்கம் இடம் பெறும். நிறுவனத்தின் வலைதளம் வாயிலாக தங்கப் பதக்கம் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X