பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங்.,அதிக இடங்களில் போட்டியிட முடிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகளில் 3:1:1 எனவும், கொம்யூன் பஞ்சாயத்துகளில் 5:3:2 என 'சீட்' பங்கீடு செய்து கொள்ளஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், வரும் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதிகள் என மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நாளை 30ம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி,



புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகளில் 3:1:1 எனவும், கொம்யூன் பஞ்சாயத்துகளில் 5:3:2 என 'சீட்' பங்கீடு செய்து கொள்ளஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், வரும் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதிகள் என மூன்று கட்டமாக நடைபெற உள்ளது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நாளை 30ம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் 'சீட்' பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பேச்சுவார்த்தைஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிகளும், தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளாட்சி அமைப்புகளை பட்டியலிட்டனர்.அதில், ஒவ்வொரு கட்சியினரும் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், தீர்வு ஏற்படாமல் கூட்டம் முடிந்தது.புது பார்முலாஇத்தேர்தலில் கூட்டணி யில் உள்ள மூன்று கட்சிகளும் நகராட்சி சேர்மன் பதவிகளை முறையே 3:2:1 எனவும், கொம்யூன் பஞ்சாயத்துகளில் 5:3:2 என பங்கீடு செய்து கொள்வது.நகராட்சி கவுன்சிலர், கொம்யூன் பஞ்சாயத்துகளில் கவுன்சில் உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளை சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ள கட்சிகள் 60 சதவீதமும், மற்ற இரு கட்சிகள் தலா 20; 20 என்ற சதவீதத்தில் 'சீட்'களை பங்கிட்டுக் கொள்ள என்.ஆர்.காங். கட்சி உத்தேசித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே நாளை 30ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்திட அக்கட்சி முடிவு செய்துள்ளது.அ.தி.மு.க.,- பா.ஜ., முரண்டுகூட்டணியில் உள்ள அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்திட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், புதுச்சேரி நகராட்சியை பிடித்தே ஆக வேண்டும் என போராடி வருகிறது.ஆனால், பா.ஜ.,வி னரோ, கட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுச்சேரி நகராட்சியை கைப்பற்றிட காய் நகர்த்தி வருகின்றனர்.தி.மு.க., கூட்டணிஇக்கூட்டணியில், சட்டசபை தேர்தல் பார்முலா படி, 60:40 சதவீத அடிப்படையில் 'சீட்' பங்கீடு செய்து கொள்ள காங்., திட்டமிட்டுள்ளது.அதாவது, காங்., கட்சிக்கு 60 சதவீத இடங்கள், தி.மு..க.,விற்கு 40 சதவீத இடங்கள் பங்கீடு செய்து கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.காங்., கட்சியின் 60 சதவீதத்தில், கூட்டணியில் உள்ள கம்யூ., உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது என காங்., திட்டம் வகுத்துள்ளது.ஆனால் தி.மு.க.,வோ, தங்களிடம் 6 எம்.எல்.ஏ.,க் கள் உள்ளதால், 50 முதல் 60 சதவீத 'சீட்' களை பெற முடிவு செய்துள்ளது.உழவர்கரைக்கு மவுசு மாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் என மொத்தம் 5 நகராட்சிகள் உள்ளன. இதில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள் சம்பளம் போடவே நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன. மாகி மற்றும் ஏனாமில், பெரிய அளவில் வருவாய் எதுவும் இல்லை.ஆனால், உழவர்கரை நகராட்சி, மாநிலத்தில் பெரிய நகராட்சி. ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் அதிகம் நடைபெற்று வருவதால், அதிக வருவாய் உள்ளது.இதனால், உழவர்கரை நகராட்சி சேர்மன் பதவியை பிடித்திட, அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X