பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடத்தில் மது அருந்தினால் நடவடிக்கை... பாயும் புகார் தெரிவிக்க காவல் துறை அறிவுறுத்தல்பொது இடத்தில் மது அருந்தினால் நடவடிக்கை...புகார் தெரிவிக்க காவல் துறை அறிவுறுத்தல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 147 கடைகள் இயங்கி வருகிறது. ஆனால், கொரோனா பரவலையடுத்து, டாஸ்மாக் கடைகளில் பார் நடத்த அனுமதிக்கவில்லை.

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 147 கடைகள் இயங்கி வருகிறது. ஆனால், கொரோனா பரவலையடுத்து, டாஸ்மாக் கடைகளில் பார் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால், டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவோர் கடை முன்பு திறந்த வெளியில் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் பல பகுதிகளில் திறந்த வெளி பார்கள் இயங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடலுார், விருத்தாசலம் உட்பட பல பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் பஸ் நிலையம, பஸ் நிறுத்தம் அருகிலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களுக்கு அருகிலும் உள்ளது.

பார் இல்லாததால் மது வாங்குவோர் கடை அருகிலேயே அமர்ந்து திறந்த வெளியில் மது குடிக்கின்றனர்.குடித்த காலி பாட்டில்களை அப்படியே வீசுவதும், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், உணவுப் பொருட்களை வீசிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது ஒருபுறமிருக்க திறந்த வெளியில் மது அருந்தும் நபர்களை பார்த்து பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடலுார் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.திறந்த வெளியில் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறாக மது குடிக்க தடை உள்ளது. ஆனால், இது பற்றி குடிப்பிரியர்கள் கவலைப்படுவதில்லை. எனவே, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், டாஸ்மாக் கடைகள் செயல்படும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, திறந்த வெளி பாரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை பயன்படுத்துவதால் பொது மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை அறிந்த எஸ்.பி., சக்திகணேசன், இதனை கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் மது அருந்துவது குறித்து போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தினார். அதற்காக, போலீஸ் உதவி தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுார், செப். 29-


கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 147 கடைகள் திறந்து இயங்கி வருகிறது. ஆனால், கொரோனா பரவலையடுத்து, டாஸ்மாக் கடைகளில் பார் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால், டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவோர் கடை முன்பு திறந்த வெளியில் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் பல பகுதிகளில் திறந்த வெளி பார்கள் இயங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடலுார், விருத்தாசலம் உட்பட பல பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் பஸ் நிலையம, பஸ் நிறுத்தம் அருகிலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களுக்கு அருகிலும் உள்ளது. பார் இல்லாததால் மது வாங்குவோர் கடை அருகிலேயே அமர்ந்து திறந்த வெளியில் மது குடிக்கின்றனர்.குடித்த காலி பாட்டில்களை அப்படியே வீசுவதும், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், உணவுப் பொருட்களை வீசிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது ஒருபுறமிருக்க திறந்த வெளியில் மது அருந்தும் நபர்களை பார்த்து பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடலுார் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.திறந்த வெளியில் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறாக மது குடிக்க தடை உள்ளது. ஆனால், இது பற்றி குடிப்பிரியர்கள் கவலைப்படுவதில்லை. எனவே, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், டாஸ்மாக் கடைகள் செயல்படும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, திறந்த வெளி பாரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை பயன்படுத்துவதால் பொது மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை அறிந்த எஸ்.பி., சக்திகணேசன், இதனை கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் மது அருந்துவது குறித்து போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தினார்.

அதற்காக, போலீஸ் உதவி தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க...கடலுார் - 94981 00552விருத்தாசலம் - 94981 00571சேத்தியாத்தோப்பு- -- 94981 00588திட்டக்குடி - 94981 00605மதுவிலக்கு அமல் பிரிவு - 04142 284353சிதம்பரம் - 94981 00561நெய்வேலி - 94981 00579பண்ருட்டி - 94981 00597தனிபிரிவு - 04142 284333புகார் தெரிவிக்க...கடலுார் - 94981 00552விருத்தாசலம் - 94981 00571சேத்தியாத்தோப்பு- -- 94981 00588திட்டக்குடி - 94981 00605மதுவிலக்கு அமல் பிரிவு - 04142 284353சிதம்பரம் - 94981 00561நெய்வேலி - 94981 00579பண்ருட்டி - 94981 00597தனிபிரிவு - 04142 284333

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X