பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டி

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடியாக முடிவு செய்துள்ளது.புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பா.ம.க., ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில, மண்டல நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தை தொடர்ந்து, மாநில அமைப்பாளர் தன்ராஜ் அளித்த

புதுச்சேரி : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடியாக முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பா.ம.க., ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில, மண்டல நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தை தொடர்ந்து, மாநில அமைப்பாளர் தன்ராஜ் அளித்த பேட்டி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பா.ம.க., இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறது. தற்போது, புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகள் தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ரங்கசாமி, பா.ம.க.,வை கூட்டத்திற்கு அழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என எங்களுக்கு தெரியவில்லை. அதனால், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் எல்லா இடங்களிலும் தனித்து போட்டியிட முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் .உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளிடம் இருந்து முறையான அழைப்பு எங்களுக்கு வரவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.அதன்படி, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து இடங்களிலும், போட்டியிடுவதற்கான விருப்ப மனு 28ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., எந்த நிலைப்பாடு எடுப்பது என, உயர்மட்ட குழு ஆலோசனை செய்து, கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X