பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அருகே ஏரி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள விருத்தகிரி ஏரி மூலம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது, துார்ந்து கிடக்கும் ஏரியின் கரையை தனிநபர்கள்

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அருகே ஏரி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது.

விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள விருத்தகிரி ஏரி மூலம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது, துார்ந்து கிடக்கும் ஏரியின் கரையை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றியுள்ளனர்.இந்நிலையில், ஏரியில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, தனிநபர் ஒருவர் பென்சிங் அமைத்தார். இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாசன வாய்க்காலில் 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் துார்வாரும் முடிவு கிடப்பில் போனது. கால்நடைகளும் வாய்க்காலை கடந்து செல்ல முடியவில்லை. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியானது. தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். வாய்க்காலை ஆக்கிரமித்த ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அளவீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.விருத்தாசலம், செப். 29-


'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அருகே ஏரி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள விருத்தகிரி ஏரி மூலம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது, துார்ந்து கிடக்கும் ஏரியின் கரையை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றியுள்ளனர்.இந்நிலையில், ஏரியில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, தனிநபர் ஒருவர் பென்சிங் அமைத்தார். இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாசன வாய்க்காலில் 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் துார்வாரும் முடிவு கிடப்பில் போனது. கால்நடைகளும் வாய்க்காலை கடந்து செல்ல முடியவில்லை. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியானது. தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். வாய்க்காலை ஆக்கிரமித்த ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அளவீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X