பொது செய்தி

தமிழ்நாடு

நாககுப்பத்துடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : மரவாநத்தம் காட்டுகொட்டகையைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வெட்டிபெருமாள் அகரம் வருவாய் கிராமத்திற்குட்பட்டு மரவாநத்தம் காட்டுகொட்டகை பகுதி உள்ளது. மரவாநத்தம் பகுதியில் 860 ஏக்கரை தனியாக பிரித்து அருகில் உள்ள நாககுப்பம் கிராமத்தில் சேர்த்து புதிய வருவாய்
 நாககுப்பத்துடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி : மரவாநத்தம் காட்டுகொட்டகையைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வெட்டிபெருமாள் அகரம் வருவாய் கிராமத்திற்குட்பட்டு மரவாநத்தம் காட்டுகொட்டகை பகுதி உள்ளது.

மரவாநத்தம் பகுதியில் 860 ஏக்கரை தனியாக பிரித்து அருகில் உள்ள நாககுப்பம் கிராமத்தில் சேர்த்து புதிய வருவாய் கிராமம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து மரவாநத்தம் மக்களிடம் கருத்து கேட்காமல், வருவாய்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். நாககுப்பம் வருவாய் கிராம எல்லையில் சேர எங்களுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து வெட்டிபெருமாள்அகரம் வருவாய் கிராமத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க விரும்புகிறோம். இதை மீறி நாககுப்பத்துடன் இணைத்தால் மரவாநத்தம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக தெரிவித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையிட்டனர்.கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் அறிவுறுத்தலின் பேரில், கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X