பொது செய்தி

தமிழ்நாடு

100 டவர் ஃபேன் பறிமுதல் வேட்பாளர் மீது வழக்கு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 100 டவர் ஃபேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வேட்பாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் ஊராட்சிக்குட்பட்ட, மிலாரிப்பட்டு கிராமத்தில் இரண்டாவது வார்டில் போட்டியிடும் மணிகண்டன், 42; ரகோத்தமன் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருளைப் பதுக்கி
 100 டவர் ஃபேன் பறிமுதல் வேட்பாளர் மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 100 டவர் ஃபேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வேட்பாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் ஊராட்சிக்குட்பட்ட, மிலாரிப்பட்டு கிராமத்தில் இரண்டாவது வார்டில் போட்டியிடும் மணிகண்டன், 42; ரகோத்தமன் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், துணை தாசில்தார் விஜயன், சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் ரகோத்தமன் வீட்டில் 50 அட்டை பெட்டிகளில், 100 டவர் ஃபேன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து ரகோத்தமன் மற்றும் வேட்பாளர் மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X