லாரி டிரைவர்களுக்கு தட்டுப்பாடு: பரிதவிக்கும் பிரிட்டன்!

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன் : பிரிட்டன் நாட்டில், வரலாறு காணாத கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இல்லாமல் இல்லை. ஆனால், எண்ணெய் லாரிகளை ஓட்டுவதற்கு டிரைவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த நான்கு நாட்களாக, பெட்ரோல் நிலையங்களின் வாசலில், மக்கள் சாரி சாரியாக கார்களோடு நிற்கின்றனர்.பெட்ரோல் கிடைக்காதோ என்ற பயத்தில், அவசர அவசரமாக பெட்ரோல் டாங்கை நிரப்பிக்
UK, Truck Driver, Shortage

லண்டன் : பிரிட்டன் நாட்டில், வரலாறு காணாத கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இல்லாமல் இல்லை. ஆனால், எண்ணெய் லாரிகளை ஓட்டுவதற்கு டிரைவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக, பெட்ரோல் நிலையங்களின் வாசலில், மக்கள் சாரி சாரியாக கார்களோடு நிற்கின்றனர்.பெட்ரோல் கிடைக்காதோ என்ற பயத்தில், அவசர அவசரமாக பெட்ரோல் டாங்கை நிரப்பிக் கொள்கின்றனர். லாரி டிரைவர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு அந்நாட்டு ராணுவம், 150 டிரைவர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. பிரிட்டனில், ஒரு லட்சம் லாரி டிரைவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.


உரிமை பறிபோனது


* முதலாவதாக, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், கனரக வாகனங்களை ஓட்ட டிரைவர்கள் தேர்வு செய்யப்படுவது படிப்படியாக குறைந்தது.புதிதாக லாரி டிரைவர் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. மேலும், கொரோனாவினால், டிரைவர்களுடைய வேலை நேரம் குறைந்து போனது.பலருக்கு வேலையும் பறி போனது. இந்நிலையில், பல டிரைவர்கள், உணவு 'சப்ளை' செய்யும் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்.

* இரண்டு, 'பிரெக்சிட்.' ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்து, வெளியேறியதற்குப் பெயரே, 'பிரெக்சிட்' என்பதாகும். ஐரோப்பிய யூனியனின் இதர நாடுகளைச் சேர்ந்த பலர் பிரிட்டனில் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர். பிரெக்சிட் அமல் ஆனதால், இத்தகைய வெளிநாட்டு டிரைவர்களுக்கு வேலை செய்யும் உரிமை பறிபோனது. அதனால், அவர்கள், பிரிட்டனை விட்டு வெளியேறினர்.

* மூன்றாவது, பிரிட்டனிலேயே இளைஞர்களை லாரி டிரைவர் வேலைக்கு தேர்வு செய்வது குறைந்துவிட்டது.ஏற்கனவே இருந்த பலரும் மூப்படைந்ததால், லாரி ஓட்டுவதை விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர்.இந்நிலையில் தான், லாரி டிரைவர்கள் தட்டுப்பாடு வெளிச்சத்துக்கு வரத் துவங்கியது. முதலில், காருக்குப் பெட்ரோல் கிடைக்காமல், பெட்ரோல் நிலைய வாசலில் மக்கள் நிற்க ஆரம்பித்தனர்.


latest tamil news




தற்காலிக விசா


பின்னர், மளிகை சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளும் காலியாகத் துவங்கின. படிப்படியாக பதற்றம் பரவ ஆரம்பித்து விட்டது. ஆம்புலன்சும், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அமைப்புகளும் தங்களுக்கு முதலில் பெட்ரோல் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தன.

இந்த எதிர்பாராத சூழலைச் சமாளிக்க, அந்நாட்டு அரசு, வெளிநாட்டு லாரி டிரைவர்களுக்கும் உணவுத் துறை பணியாளர்களுக்கும், உடனடியாக, 10 ஆயிரத்து 500 தற்காலிக விசா வழங்குவதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால், இதில் சிக்கல்.ஏற்கனவே, பிரிட்டனின் அண்டை நாடுகளான போலந்தில் 1 லட்சத்து 23 ஆயிரம் லாரி டிரைவர்கள் பற்றாக்குறை.


மீண்டும் வேலை


ஜெர்மனியிலும் 76 ஆயிரம் டிரைவர்கள் பற்றாக்குறை. இந்நிலையில், மற்ற நாடுகளில் இருந்து எப்படி டிரைவர்கள் பிரிட்டன் வருவார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. லாரி டிரைவர்கள் கூடுதல் சம்பளம், தங்குமிடம், படிகள் ஆகியவற்றை ஏராளமாக வழங்கி, அவர்களை பிரிட்டன் அழைத்து வருவதற்கு அந்நாட்டு லாரி நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

ஏற்கனவே ஓய்வுபெற்ற டிரைவர்கள், வேறு கனரக வாகனங்களை ஓட்டிய டிரைவர்கள் ஆகியோரில் 10 லட்சம் பேரை மீண்டும் வேலைக்கு வரச் சொல்லி பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டு இருக்கிறது.அடுத்த சில நாட்களில், டிரைவர் பிரச்னை தீரவில்லை எனில், அந்நாட்டில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
29-செப்-202107:56:51 IST Report Abuse
மணி சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X