கிரைம் செய்திகள்...

Added : செப் 29, 2021
Share
Advertisement
தம்பியைத் தாக்கியவர் மீது வழக்குவானுார்: உப்புவேலுார் செங்கேணி குலத்தெருவைச் சேர்ந்தவர் தேவராசு மகன்கள் சங்கர், 35; சரவணன், 32; இவர்களது தாய் இறந்து விட்டதால், வாரிசு சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், சங்கர் மற்றும் அவரது மனைவி தரணி, 34; ஆகியோர், சரவணனை திட்டி, தாக்கியுள்ளனர். இது குறித்து சரவணனின் மனைவி

தம்பியைத் தாக்கியவர் மீது வழக்கு

வானுார்: உப்புவேலுார் செங்கேணி குலத்தெருவைச் சேர்ந்தவர் தேவராசு மகன்கள் சங்கர், 35; சரவணன், 32; இவர்களது தாய் இறந்து விட்டதால், வாரிசு சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், சங்கர் மற்றும் அவரது மனைவி தரணி, 34; ஆகியோர், சரவணனை திட்டி, தாக்கியுள்ளனர்.

இது குறித்து சரவணனின் மனைவி ராஜேஸ்வரி, அளித்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் சங்கர், தரணி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கிணற்றில் பசு:உயிருடன் மீட்புதிருவெண்ணெய்நல்லுார்: கீழ்தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் முருகராஜ், 50; விவசாயி. இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துகொண்டிருந்தார். அப்போது அவரது பசு மாடு 25 அடி கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரேணு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.தடுப்புக் காவலில் இருவர் கைதுவிழுப்புரம்: மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் விஜயகுமார், 21; இவர் மீது, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவில் சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., ஸ்ரீநாதா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், விஜயகுமாரை தடுப்புக் காவலில் நேற்று முன்தினம் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவுதிருவெண்ணெய்நல்லுார்: ஆணைவாரி கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க உடல் நசுங்கிய நிலையில் கிடந்தது. ரயில்வே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவாவடிவேல், சப் இன்ஸ்பெக்டர் அசோகன், அருளானந்தம் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். இறந்தவர் வலது கையில் எஸ்.என்., என பச்சை குத்தியிருந்தார். மற்றும் பச்சை நிறம் கட்டம் போட்ட ஷர்ட் அணிந்திருந்தார். காரைக்குடி - சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.மாடு உதைத்து பெண் சாவுசெஞ்சி: குண்டலபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஏகவள்ளி, 45; இவர், கடந்த 19ம் தேதி மாலை தங்கள் வீட்டில் உள்ள பசு மாட்டிடம் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மாடு எட்டி உதைத்ததில் ஏக வள்ளியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார். கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்குவானுார்: மொளசூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 50; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காணாமல் போன இவரது மாட்டை தேடிச் சென்றார்.அப்போது, கோவடி பள்ளத்தெருவை சேர்ந்த சுப்ரமணி, 50; என்பவரின் பம்ப் செட் உள்ள மரத்தடியில் அமர்ந்தபடி துாங்கினார். அப்போது அங்கு வந்த சுப்ரமணி, செல்வத்தை திட்டி அனுப்பியுள்ளார். சில மணிநேரத்தில் கல்லங்குப்பம் கூட்ரோட்டில் நின்றிருந்த செல்வத்தை, மீண்டும் சுப்ரமணி, திட்டி, டியூப் லைட்டால், வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து செல்வம் மகன் விஜயராஜ் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார், சுப்ரமணி மீது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சாராயம் கடத்திய இருவர் கைதுவிழுப்புரம்: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மதுரப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு பைக்குகளை சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி மாநில எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பைக் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த வேணுகோபால், 33; பாப்பனப்பட்டைச் சேர்ந்த ஹரி, 36; ஆகியோரை கைது செய்தனர்.ஆண் உடல்: போலீஸ் விசாரணைவிழுப்புரம்: கொட்டப்பாக்கத்து வேலி கிராமத்தில் உள்ள ஏரி வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். விழுப்புரம் டவுன் வி.ஏ.ஓ., செந்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பா.ம.க., பிரமுகர் தாக்குவானுார்: மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 52; பா.ம.க., கிளைச் செயலாளர். இவர் பா.ம.க., சார்பில் 23வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முத்து என்பவரை ஆதரித்து, கடந்த 26ம் தேதி ஓட்டு சேகரித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனுவாசன் என்பவர், ராஜசேகரனிடம் தகராறு செய்துள்ளார். இதனையறிந்த சீனுவாசனின் மாமா குமரன், 44; ராஜசேகரனிடம் இதுகுறித்து கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இளம்பெண் மாயம்அவலுார்பேட்டை: கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி உகந்தாய். இவரது மகள் இந்து, 24; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 24ம் தேதி சென்னை செல்வதாக கூறிச்சென்றவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உகந்தாய் அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மனைத் தகராறு: 7 பேர் மீது வழக்கு அவலுார்பேட்டை: தேப்பிரம்பட்டு - ஆனைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி கவுரி, 55; இவருக்கு சொந்தமான வீட்டுமனையில் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் தரப்பினர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி களம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கேட்ட கவுரியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் செஞ்சி உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, சங்கர் , தினேஷ், தீரன், சேட்டு, சக்கரை, விஜயா, சிவா உட்பட 7 பேர் மீது அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X