பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் நான்காம் கட்ட மாணவர் சேர்க்கை

Added : செப் 29, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நான்காம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லுாரி முதல்வர் சண்முகம் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதுவரை நடந்த

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நான்காம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லுாரி முதல்வர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதுவரை நடந்த மூன்று கட்ட மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. நாளை 30ம் தேதி காலை 10:00 மணியளவில் நான்காம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்கிறது.இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் அனைத்தும் அரசு விதிமுறைகளின் படி தரவரிசை அடிப்படையில் இதர பிரிவினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கட்டாயம் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு gascrishivandiyam.in என்ற இணையதளத்தையோ, அல்லது மாணவர் சேர்க்கை மையம் 98431 75303 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X