பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி, அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., சிலம்புச்செல்வன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., தேவராஜன் வரவேற்றார். தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் (சிப்காட்) ஏகாம்பரம், தாசில்தார் நெகருன்னிசா, டி.எஸ்.பி., இளங்கோவன் பேசினர்.தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கை
 தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி, அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ., சிலம்புச்செல்வன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., தேவராஜன் வரவேற்றார். தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் (சிப்காட்) ஏகாம்பரம், தாசில்தார் நெகருன்னிசா, டி.எஸ்.பி., இளங்கோவன் பேசினர்.தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவும், இரவு நேரங்களில் பிரசாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.தி.மு.க., குபேந்திரன், அ.தி.மு.க., செல்வம், தே.மு.தி.க., முத்துசாமி, வி.சி., துரைவளவன், மா.கம்யூ., முருகன், பா.ஜ., துரைராஜ், பா.ம.க., சேகர், அ.ம.மு.க., ஜெகதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.செஞ்சிஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராஜன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., இளங்கோவன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., கேசவலு வரவேற்றார். இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.தி.மு.க., விஜயகுமார், அ.தி.மு.க., கோவிந்தசாமி, ம.தி.மு.க., ஏழுமலை, காங்., சரவணன், ம.நீ.ம., செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X