நெல்மூட்டை ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் தடுத்ததால் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்மூட்டை ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் தடுத்ததால் பரபரப்பு

Added : செப் 29, 2021
Share
ரிஷிவந்தியம் : எடுத்தனுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுாரில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகள் முறையாககொள்முதல் செய்யப்படாததால், இரண்டு மாதங்களுக்கு மேலாக தேக்கமடைந்தன.இந்நிலையில் கொள்முதல் செய்யும்

ரிஷிவந்தியம் : எடுத்தனுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுாரில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகள் முறையாககொள்முதல் செய்யப்படாததால், இரண்டு மாதங்களுக்கு மேலாக தேக்கமடைந்தன.இந்நிலையில் கொள்முதல் செய்யும் பணி நேற்றுடன் முடிந்ததாக தகவல் பரவியது. இதையறிந்த விவசாயிகள் சிலர் எடுத்தனுார் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை குடோனுக்கு ஏற்றிச் சென்ற லாரியை மறித்து, 2 மாதங்களுக்கு மேல் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் நெற்பயிர்கள் முளைத்து வீணாகியுள்ளன.

வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்கிறீர்கள் என கேட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.இம்மாதத்திற்கான கொள்முதல் முடிந்தது, மீண்டும் அடுத்த மாதம் கொள்முதல் செய்யப்படும் என எடையாளர் ராஜசேகர் கூறியதையொட்டி விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X