பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களின் ஓட்டுகளைப் பெற வியூகம் பரிசை வாரி வழங்கும் வேட்பாளர்கள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 6,097 பதவியிடங்களுக்கு 19 ஆயிரத்து 982 வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு


ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 6,097 பதவியிடங்களுக்கு 19 ஆயிரத்து 982 வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 ஊராட்சித் தலைவர், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர் உட்பட 6,097 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 1,369 பேர், ஊராட்சித் தலைவருக்கு 2,702 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 15 ஆயிரத்து 734 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 982 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.இந்த வேட்பாளர்களில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரு சில ஊராட்சிகளில் தொகை நிர்ணயம் செய்து, போட்டியிடுவோர்களிடையே ஏலத்தில் விட்டனர். இந்த பதவிகள் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை ஏலம் போனதை அறிந்த, மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து எச்சரித்தார்

.இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிடுவோர் பலர் பொதுமக்களிடம் இருந்து ஓட்டுகளை பெறுவதற்கான சில யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.இரவு நேர பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று, இனிப்புடன் பரிசு பொருட்களை வழங்கி வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இது ஒருபுறம் இருந்தாலும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சில கட்சி பிரமுகர்கள் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வேட்பாளர்களிடம் பெற்று, அவர்களின் வெற்றியை தேர்தலுக்கு முன்பாக உறுதி செய்து உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் முறைகேடுகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பெரும்பாலும் வாகன தணிக்கையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

இதனை பயன்படுத்தி, கிராம பகுதிகளில் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்கள் மூலம் மறைமுகமாக மக்களின் ஓட்டுகளை பறிக்கும் முயற்சியில் நுாதன முறையில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் பிரசாரங்களையும் கவனித்து, விதிமுறைகள் மீறுவது கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கு நியாயமான வெற்றி கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X