சிறுமி பலாத்கார முயற்சி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார முயற்சி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

Added : செப் 29, 2021
Share
கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அவர் 2019 மார்ச் 27ம் தேதி காலை பள்ளிக்கு சென்றார். அவரது தாய் ஜவுளி எடுக்க சிதம்பரம் சென்றார்.சிறுமி பள்ளி
 சிறுமி பலாத்கார முயற்சி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அவர் 2019 மார்ச் 27ம் தேதி காலை பள்ளிக்கு சென்றார். அவரது தாய் ஜவுளி எடுக்க சிதம்பரம் சென்றார்.சிறுமி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினார். தாய் வீட்டிற்கு வர தாமதமானதால் சிறுமி அதே பகுதியில் நிலத்தில் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்றார். அங்கு வந்த காட்டுமன்னார்கோவில், வெண்ணையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பீட்டர் அபிஷேக நாதன் மகன் மகிமை தாஸ், 21; என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து மகிமை தாசை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மகிமை தாசிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அரசு மூலமாக பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X