பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரவில், திடீர் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர். இங்கு நேற்றிரவு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
 பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரவில், திடீர் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர்.

இங்கு நேற்றிரவு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். டிக்கெட் கொடுக்குமிடம், படகு குழாம், சுற்றுலா வளாகத்தை ஆய்வு செயது துடுப்பு, மோட்டார் படகுகள் எண்ணிக்கை, படகு இயக்கப்படும் நேரம் மற்றும் இருக்கும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.படகுகள் மற்றும் படகு சவாரி செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வனக்காட்டில் இருந்த சுற்றுலா பயணிகளின் தங்கும் விடுதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுயளித்தார்.சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப்நந்துாரி, கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட வன அலுவலர் செல்வம், சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் சபேசன், தி.மு.க., நகர செயலர் கிள்ளை ரவீந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X