சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூத் சிலிப் வாங்க மறுப்பு செஞ்சி அருகே பரபரப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
செஞ்சி : தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள பொன்னங்குப்பம் கிராம மக்கள் பூத் சிலிப் வாங்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமான துத்திப்பட்டு கிராமத்தில் பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக பொன்னங்குப்பம் கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணிக்க

செஞ்சி : தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள பொன்னங்குப்பம் கிராம மக்கள் பூத் சிலிப் வாங்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமான துத்திப்பட்டு கிராமத்தில் பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக பொன்னங்குப்பம் கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிக்கு கொடுத்திருந்த வேட்பு மனுக்களையும் திரும்பப் பெற்றனர்.இந்நிலையில் நேற்று மாலை சத்துணவு பணியாளர்கள் மூலம் பொன்னங்குப்பம் கிராமத்திற்கு பூத் சிலிப் கொடுக்கச் சென்றனர். அப்போது, கிராம மக்கள் பூத் சிலிப்பை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.பூத் சிலிப் வாங்க மறுத்துள்ளதால் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பது என அறிவித்திருப்பதில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X