பொது செய்தி

இந்தியா

தாவணகரேவில் உரிமை மீட்பு போராட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு போராட்டம், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் தாவணகரேவில் இன்று நடக்கவுள்ளது.பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனக்கென்று தனி செல்வாக்கை வைத்துள்ளார்.கடந்த, 2013 - 2018 வரை அவரது ஆட்சி காலம் முடியும் தருவாயில், சட்டசபை தேர்தல் நெருங்கும்

பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு போராட்டம், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் தாவணகரேவில் இன்று நடக்கவுள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனக்கென்று தனி செல்வாக்கை வைத்துள்ளார்.கடந்த, 2013 - 2018 வரை அவரது ஆட்சி காலம் முடியும் தருவாயில், சட்டசபை தேர்தல் நெருங்கும் போது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை வைத்து பெரிய மாநாடு நடத்தினார். இது அவருடன் நெருக்கமாக இருப்போருக்கு எரிச்சலை ஊட்டியது. தற்போது, ஒன்றரை ஆண்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது.இந்நிலையில், அவர் தலைமையில் தாவணகரேவில் இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடக்கவுள்ளது.இப்போராட்டத்தில் தனக்கு ஆதரவாக உள்ள பிரமுகர்கள் கட்டாயம் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். கட்சி சார்பில் போராட்டம் நடத்தவில்லை என்பதால், எந்தெந்த தலைவர்கள் பங்கேற்பர் என்பது காங்கிரஸ் தலைவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X