கும்பக்கரையில் நீர்வரத்து; அனுமதிக்கு எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரையில் நீர்வரத்து; அனுமதிக்கு எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2021
Share
பெரியகுளம் : நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீராக உள்ள நிலையில் குளிப்பதற்கு அனுமதியை சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் இம்மாதம் துவக்கம் முதல் மழை சாரலாகவும், அவ்வப்போது கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர் வரத்து சீராக

பெரியகுளம் : நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீராக உள்ள நிலையில் குளிப்பதற்கு அனுமதியை சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் இம்மாதம் துவக்கம் முதல் மழை சாரலாகவும், அவ்வப்போது கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர் வரத்து சீராக உள்ளது. ஏப்ரல் முதல் கொரோனா தடுப்புக்காக கும்பக்கரைக்கு செல்வதற்கு வனத்துறை விதித்த தடைஅமலில் உள்ளது. ஊரடங்கு தளர்வால் வைகைஅணை சுற்றுலாதலம் திறக்கப்பட்டது.விரைவில் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X