சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை சோதனை பணம், புடவை பறிமுதல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : கண்டாச்சிபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த நில எடுப்பு தனி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பஸ்சில் வந்த விழுப்புரம்,

திருக்கோவிலுார் : கண்டாச்சிபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த நில எடுப்பு தனி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பஸ்சில் வந்த விழுப்புரம், வண்டிமேட்டைச் சேர்ந்த கற்பூர வியாபாரியான இப்ராஹிம், 46; என்பவர் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 900 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன், பணத்தைப் பறிமுதல் செய்தனர்.மேலும், அதே பஸ்சில் வந்த பயணி ஒருவரிடமிருந்து 74 புடவைகளையும் பறிமுதல் செய்தனர். பணம் மற்றும் புடவைகளை முகையூர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X