செல்லபுரத்தின் அவதியை சொல்லி மாளாதுஊ: கொடைக்கானல் 19வது வார்டில் குமுறல்| Dinamalar

'செல்லபுரத்தின் அவதியை சொல்லி மாளாது'ஊ: கொடைக்கானல் 19வது வார்டில் குமுறல்

Added : செப் 29, 2021
Share
கொடைக்கானல் : கொடைக்கானல் செல்லபுரத்தில் செயல்படுத்தாத திட்டங்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கொடைக்கானல் நகராட்சியில் 19ஆவது வார்டு செல்லபுரம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழ்க்கை வசதிகள் மேம்பட்டதாக இல்லை என குமுறுகின்றனர்.இங்கு மனோரத்தின சோலை அணை, ரோஜா பூங்கா, வானியற்பியல் மையம் போன்ற சிறப்புகளுடன், கொடைக்கானலிலேயே

கொடைக்கானல் : கொடைக்கானல் செல்லபுரத்தில் செயல்படுத்தாத திட்டங்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கொடைக்கானல் நகராட்சியில் 19ஆவது வார்டு செல்லபுரம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழ்க்கை வசதிகள் மேம்பட்டதாக இல்லை என குமுறுகின்றனர்.இங்கு மனோரத்தின சோலை அணை, ரோஜா பூங்கா, வானியற்பியல் மையம் போன்ற சிறப்புகளுடன், கொடைக்கானலிலேயே இதுதான் உயரமான பகுதியாக உள்ளது. இத்தனை சிறப்பு பெற்றிருந்தாலும் குரங்குகளால் தொல்லை, மழைநீர் வடிகால் வசதியும் இல்லை, ரோடு சேதம், மின்வெட்டு, போதை வஸ்து புழக்கம் என இப்பகுதியினர் குமுறலை வெளிப்படுத்தினர். வசதிக்குறைவு பற்றி நகராட்சிக்கு தெரியப்படுத்தியும் பலனில்லை என்பது மக்களின் வருத்தம்.

குடியிருப்போர் கூறியதாவது:வரி வேண்டும், குப்பை வேண்டாமாவிவசாயி மாரிமுத்து: நகராட்சி மூலம் வீடுகளில் குப்பை வரி வாங்குகிறவர்கள், குப்பையை வாங்குவதில்லை. இதனால் எங்கள் சொந்த இடங்களில் குப்பையை குவித்து தீ வைத்து எரிக்கிறோம். கீழ்குண்டாறு குடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை தோண்டியதால் சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.

சாக்கடை கட்டமைப்பு இருந்தும் தூர்வாராததால், கழிவுநீருடன், மழை நீர் கலந்து தேங்கி, துர்நாற்றம், நோய் தொற்று வாய்ப்பு உள்ளது.வீடுகளுக்குள் மழைநீர்வர்த்தகர் சாதிக்: தாழ்வான பகுதியாக செல்லபுரம் உள்ளது. இதில் 10 தெருக்கள் உள்ளன. வடிகால் வசதியில்லாததால், கனமழை நேரங்களில் வடியும் நீர் வீடுகளுக்குள் உட்புகுகிறது. ரோடுகளிலும் தேங்கி நிற்கின்றன. தெருக்களின் நடுவே உள்ள மின்கம்பங்கள் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும்.

கூடுதல் குடிநீர் வேண்டும்

சமூக ஆர்வலர் கண்ணன்: ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கிறோம். இருந்தாலும் இங்குள்ளவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எட்டு நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. வாரம் இருமுறை, கூடுதலாக ஒரு மணி நேரம் தண்ணீர் வழங்க வேண்டும். இஷ்டம்போல இன்றி, குறிப்பிட்ட நேரத்தில் சப்ளை செய்ய வேண்டும். அப்சர்வேட்டரி -- செல்லபுரம் இடையே துவக்கப் பள்ளி, ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவ்வழியில் சுற்றுலா பயணிகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மினி கிளினிக் வேண்டும்

இயற்கை ஆர்வலர் ஜனார்த்தனன்: நகரிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள இந்த பகுதியில் அவசர சிகிச்சைக்கு மினி கிளினிக் வசதி ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி இப்பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. மின் வாரியத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. போதை வஸ்துகள் தாராளமாக புழகத்தில் உள்ளதால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X