பொது செய்தி

இந்தியா

கோவில் இடிப்பு:தாசில்தார் தூக்கியடிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மைசூரு : கர்நாடகா முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நஞ்சன்கூடு கோவில் இடிப்பு தொடர்பாக, தாசில்தார் அதிரடியாக பெங்களூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹூச்சகனியில் இருந்த மஹாதேவம்மா கோவில், அரசு நிலத்தில் முறைகேடாக கட்டியிருப்பதாக கூறி, கடந்த மாதம் இடிக்கப்பட்டது.இதற்கு கர்நாடகா முழுதும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் கடும்

மைசூரு : கர்நாடகா முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நஞ்சன்கூடு கோவில் இடிப்பு தொடர்பாக, தாசில்தார் அதிரடியாக பெங்களூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹூச்சகனியில் இருந்த மஹாதேவம்மா கோவில், அரசு நிலத்தில் முறைகேடாக கட்டியிருப்பதாக கூறி, கடந்த மாதம் இடிக்கப்பட்டது.இதற்கு கர்நாடகா முழுதும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வழிபாட்டு தலங்கள் இடிப்பது நிறுத்தப்பட்டது.

முறைகேடாக கட்டப்பட்டுள்ள கோவில்கள் முறைப்படுத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், கோவில் இடிப்பு சம்பவம் தொடர்பாக நஞ்சன்கூடு தாசில்தார் மோகனகுமாரி அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு, பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த ஐ.எம்.ஏ., நிதி மோசடி வழக்கில் சொத்து கையகப்படுத்தும் அதிகாரி என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.நஞ்சன்கூடுக்கு புதிய ஏற்பாடு செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X