பொது செய்தி

தமிழ்நாடு

வில்பட்டியில் இருமுனைப்போட்டி

Added : செப் 29, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது.ஊராட்சி தலைவராக இருந்த குப்பம்மாள் சில மாதங்களுக்கு முன் இறந்தார். தற்போது துணைத் தலைவர் வாசு பொறுப்பு வகித்து வருகிறார். இங்கு உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் நடப்பதையடுத்து ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. நான்கு பேர் களத்தில் உள்ள போதும் இரு திராவிட கட்சிகளின்

கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது.

ஊராட்சி தலைவராக இருந்த குப்பம்மாள் சில மாதங்களுக்கு முன் இறந்தார். தற்போது துணைத் தலைவர் வாசு பொறுப்பு வகித்து வருகிறார். இங்கு உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் நடப்பதையடுத்து ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. நான்கு பேர் களத்தில் உள்ள போதும் இரு திராவிட கட்சிகளின் ஆதரவு பெற்றவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் வரை புகார் பறந்துள்ளது.

இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். வருவாய் பஞ்சமில்லாத ஊராட்சி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள பெரிய ஊராட்சியை கைப்பற்ற, திராவிட கட்சிகளின் பிரமுகர்கள் வில்பட்டியில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X